அன்னையும் பிதாவும்
முன்நெறி தெய்வம்
தத்துவம் தந்த உண்மை..........!
அன்பைப்பொழியும்
அன்னை மடியின் அரவணைப்பில்
அத்தனை மனித நேயம்...........!
தந்தை விரல் பிடித்து
வழிதெருவே செல்கையில்
அத்தனை தத்துவங்கள்...............!
பள்ளிக்கூட த்தின்
அறிவின் அரவணைப்பில்
அத்தனை அறிவு..................!!
ஆசிரியரின் விளக்கத்தில்
நோட்டுப் புத்தகத்தில்
நெடியதேடல்...................!!
விளையாட்டுத் திடலின்
வீர அரவணைப்பில்
விளையாட்டு வித்தைகாட்டும் உணர்வு................!!
மத்தியஸ்தர் கவனிப்பால்
விளையாட்டு நுட்பங்களை
விளக்கிடும் விசில்...........................!!
கலைக்கூடத்தின்
நளின அரவணைப்பில்
வியபூட்டும் காவியங்கள்.................!!
அண்ணாவியின் அசைவில்
நாயகன் நாயகியின்
நளினக் கலை................!!
அத்தனை விடையத்தில்
அன்னையும் பிதாவும்
இரண்டு தெயவங்கள்..............!!
இரண்டும் இல்லையேல்
இனிமை இல்லை
இவ் உலகில்.......................................!!